முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து நாட்டில் ரூ.855 கோடியில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையம்

திங்கட்கிழமை, 18 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து நாட்டில் ரூ.855 கோடியில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றை அமைப்பதற்கான அறிவிப்பை இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் வர்மா வெளியிட்டார். 

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரசை தடுக்க உலகமெங்கும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், லண்டன் இம்பீரியல் கல்லூரியும் இணைந்து இதுவரை இல்லாத வேகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இந்தநிலையில் 93 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.855 கோடி) முதலீட்டில் தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றை அமைப்பதற்கான அறிவிப்பை இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் வர்மா வெளியிட்டடார். இந்த மையம், ஆக்ஸ்போர்டுஷயர் ஹார்வெல் அறிவியல் மற்றும் புதுமை வளாகத்தில் அமைகிறது. 

இதுபற்றி அலோக் வர்மா கூறியதாவது:- புதிய தடுப்பூசி உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மைய பணிகள் முடிந்ததும், இங்கிலாந்து மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை 6 மாத காலத்தில் உற்பத்தி செய்து விட முடியும். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான சர்வதேச கூட்டணியில் இங்கிலாந்து மிகப்பெரிய பங்களிப்பாளராக, செயல்பட்டு வருகிறது. நாங்கள் மேற்கொண்டு வருகிற முயற்சியால், கோடிக்கணக்கானோருக்கு தடுப்பூசியை தயாரிக்க நாங்கள் தயாராக இருக்க வேண்டும். 

புதிய தடுப்பூசி உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இது தடுப்பூசிகளை உருவாக்குவதற்கும், பெருமளவில் உற்பத்தி செய்வதற்கும் இங்கிலாந்தின் திறனை அதிகரிப்பதில் அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு திட்டத்தின் முக்கிய அங்கமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து