முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வராமல் இருக்க மாத்திரை சாப்பிடும் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 19 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருவதாகவும், அந்த மருந்து மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை நல்ல பலன் அளித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அமெரிக்காவில் இந்த மாத்திரைகளை பயன்படுத்தும்படி அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

அதே சமயம் இது கொரோனா நோயினைத் தடுக்கும் என இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த மருந்தை நோயாளிகளுக்கு வழங்கக் கூடாது என சில மருத்துவ நிபுணர்கள் கூறினர். ஓரளவு பலன் கிடைப்பதாக சில நிபுணர்கள் கூறினர். இதனால் இந்த மருந்து சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்த போது, அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. எனினும், அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருவதாகவும், அந்த மருந்து மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோயை தடுக்கும் வகையில் பயனுள்ளதா?  என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘இந்த மருந்து குறித்து ஏராளமான நேர்மறையான தகவல்கள் எனக்கு வருகின்றன. அது பயனுள்ள மருந்து இல்லை என தெரியவந்தால், நானே உங்களுக்கு சொல்வேன் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து