Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ. 35,952-க்கு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 19 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 672 ரூபாய் குறைந்தது ரூ. 35,952-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

கடந்த ஐந்து நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று சற்று ஆறுதலாக விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று (மே 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,494 ஆகக் குறைந்தது.

நேற்று முன்தினம் இதன் விலை 4,578 ஆக இருந்தது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 84 ரூபாய் குறைந்தது. அதேபோல, நேற்று முன்தினம் 36,624 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 672 ரூபாய் குறைந்து 35,952 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் நேற்று குறைந்தது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.51.60 ஆகக் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் இதன் விலை ரூ.52.30 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 51,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து