முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீன் மனு தள்ளுபடி: சித்த மருத்துவர் தணிகாசலம் மேலும் 2 வழக்குகளில் கைது

செவ்வாய்க்கிழமை, 19 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர், மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வதந்தி பரப்பியதாக, சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனை 4 நாட்களாக ஐகோர்ட் குறைத்தது.

மேலும், போலீஸ் காவல் முடிவடைந்ததும் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு மீது விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது. அதன்படி திருத்தணிகாசலத்தின் விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக திருத்தணிகாசலம் பயன்படுத்தியதாக காவல்துறை தெரிவித்தது. அவர் மருத்துவத் துறையில் எந்த பட்டமும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவத் துறையில் பட்டம் பெற்றதாக கூறியதில்லை என்றும், பாரம்பரிய முறையில் பயிற்சி பெற்றதன் அடிப்படையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் திருத்தணிகாசலம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் திருத்தணிகாசலம் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்ததுடன், அவரது ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். திருத்தணிகாசலம் எந்த மருத்துவ தகுதியும் பெறாமல் தனது வைத்திய முறைகள் பற்றி சிகிச்சை அளித்துள்ளார், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவரைப் போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்றும் நீதிபதி தெரிவித்தார். 

 

இதற்கிடையே சிறையில் உள்ள திருத்தணிகாசலம், மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் மக்களை ஏமாற்றியதாக தற்போது 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து