முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா தலைமையில் நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம்

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க நாளை 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க நாளை 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை வகிக்கிறார்.

பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்பட 15-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து