முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி - சென்னை இரு மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை : நாடு முழுக்க பல்வேறு இடங்களில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

டெல்லியில் இருந்து இன்று 21-ம் தேதி முதலும், சென்னையில் இருந்து 23-ம் தேதி முதலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.சென்னையில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:30 மணிக்கு சிறப்பு ரயில் டெல்லி சென்றடையும்.

மறுமார்கத்தில் டெல்லியில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8:40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி மற்றும் ஆக்ரா ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில்களுக்கு ராஜதானி ரயிலுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் வசூலிக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள் பயணிக்க முடியாது. முன்பதிவு செய்தவர்களை தவிர மற்ற நபர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் சென்னை வந்து சேர்ந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து