முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழக உள்ளாட்சி துறைக்கு ரூ. 295.25 கோடி ஒதுக்கீடு : மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழகத்தின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழக உள்ளாட்சித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2020-21-ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் நிறுத்து ரூ.1928.56 தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை  2020-21ம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு வழங்கக் கூடிய மொத்த பங்குத் தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2020-21ம் ஆண்டிலேயே மீதமுள்ள தொகை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும் என துணை முதல்வர் விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், 15-வது நிதிக்குழு தன்னுடைய பரிந்துரைகளில், மக்கள்தொகை, பரப்பளவு, வருமான இடைவெளி போன்ற தமிழகத்திற்கு வலு சேர்க்காத காரணிகளுக்கு அதிக மதிப்பீடுகள் வழங்குவது காரணமாக, நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று வலியுறுத்தி, 15-வது நிதிக்குழுவிற்கு ஒரு கோரிக்கை மனுவினை அரசு தயார் செய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை 15-வது நிதிக்குழுவிடம் சரியாக எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை அரசு தொடர்ந்து நிலை நிறுத்தும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் 2வது தவணையாக மத்திய அரசிடம் இருந்து ரூ. 295.25 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. முத்ரா திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்க ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரம் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்த விவாதத்திற்கு பின் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து