முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தலாம் : மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 

இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், 

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசியர்கள், மாணவர்கள் உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்க வேண்டும். தெர்மல் சோதனை, சானிடைசர், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

தேர்வு மையங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களிலும் தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதியே ஊரங்கில் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து