முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடக்கம்

புதன்கிழமை, 20 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்தவாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொல்லியலாளர்கள் மேற்கொண்டனர்.

கீழடியுடன் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளும் கூடுதலாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.  அதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல்ப்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக கீழடியில் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால்  கீழடியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6-ம் கட்ட அகழாய்வு பணிகள்  மீண்டும் தொடங்கியுள்ளதாக, தொல்லியல் துறை உதவி இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து