முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம்

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கொரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் போக்குவரத்து, கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஆந்திராவில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மடிரெட்டி பிரதாப் கூறுகையில், 

434 வழித்தடங்களில் மொத்தம் 1683 பேருந்துகள் இயக்கப்படும். கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் மட்டுமே முதல்கட்டமாக பேருந்து போக்குவரத்து செயல்படும். தொடர்ந்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பயணிகள் முககவசம் அணிந்து சமூகவிலகலுடன் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து