முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் : மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வரும் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்றும், படிப்படியாக விமான சேவை முழு அளவுக்கு விரிவு படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி தெரிவித்துள்ளார். 25-ம் தேதி விமான சேவையை தொடங்க தயார் நிலையில் இருக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள்  31-ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து இருந்தது.கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் விமான நிறுவனங்களின் வணிக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வரும் 25-ம் தேதியான திங்கட் கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த தகவலை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் புரி வெளியிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து உள்ளூர் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 25-ம் தேதி விமான சேவையை தொடங்க தயார் நிலையில் இருக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து