முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழுமூச்சுடன் செயல்பட்டு கொரோனாவை ஒழிப்போம் : எஸ்.பி.வேலுமணி உறுதி

புதன்கிழமை, 20 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அனைவரும் முழுமூச்சுடன் செயல்பட்டு கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்போம் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றையும் விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பொதுமக்களுக்கு முக கவசம் அணிதல், அடிக்கடி சுத்தமாக கைகளை கழுவுதல், அனைத்து இடங்களிலும் 2 மீட்டர் இடைவெளியுடன் ஒருவருக்கு ஒருவர் தள்ளி நிற்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை செயல்படுத்த வேண்டும்.உயிர்காக்கும் இந்த உன்னத பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றினால் வைரஸ் தொற்றை முழுவதுமாக ஒழித்துவிடலாம். எனவே அனைவரும் முழுமூச்சுடன் செயல்பட்டு இந்த நோயை விரட்டவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்தும் மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், 2020-–21 வரவு, செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, சாலை திட்டப்பணிகள் மற்றும் குளங்கள் பராமரிப்பு குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் சென்னையில் குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்க உத்தரவிட்டார். தற்பொழுது வரை 8 லட்சம் நபர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகள், பசுமை வீடு திட்டப்பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டப்பணிகள்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஊடரங்கு காலத்திலும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் 82 லட்சம் முகக்கவசங்களை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட மின்மதி செயலியை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சம் நபர்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை வழங்கி, அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்பொழுது சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி அனைவரும் பணிபுரிவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து