முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க திட்டம் : இந்திய முன்னாள் கேப்டன் சர்தார் சிங் சொல்கிறார்

புதன்கிழமை, 20 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவுக்காக சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டமிட்டு உள்ளார்.

இந்தியாவின் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் செப்டம்பர் 2018-ல் ஓய்வு பெற்றார். அரியானாவில் போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இவரது தலைமையில் தான்  தங்கப்பதக்கம் வென்றது.கொரோனா தொற்றுநோயால் போடப்பட்டு உள்ள ஊரடங்கு முடிந்ததும், இந்தியாவுக்காக சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி ஒன்றை நிறுவ ஆர்வமாக உள்ளார்.

சர்தார் தற்போது சிர்சாவில் உள்ள அவரது குடும்ப வீட்டில் உள்ளார், அங்கு அவர் பிரபலமான நம்தாரி ஹாக்கி அகாடமியில் தனது ஹாக்கி திறன்களுக்காக  கவுரவிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டில் இந்திய ஹாக்கி அணியில் அறிமுகமான பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டதில்லை. இந்த நிலையில் சர்தார் சிங் வீடியோ  பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

இந்த ஊரடங்கின் போது, நான் எனது பெற்றோருடன் அதிக நேரம் செலவிட்டேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவம், ஏனெனில் கடந்த 15-20 ஆண்டுகளில், தேசிய அணியுடன் நிறைய பயணங்களில் கலந்து கொண்டேன். அதனால் என்னால் அதிக நேரம் குடும்பத்துடன் செலவிட முடியவில்லை.

இந்த காலகட்டத்தில், ஒரு தனிநபராகவும் அணியுடனான எனது சாதனைகளை நினைவுகூர முடிந்தது. இது எனக்கு பெருமை சேர்க்கிறது என்று கூறினார். ஒரு அகாடமி அமைப்பதற்கான திட்டங்கள் சில காலமாக சர்தார் ஈடுபட்டு வருகிறார். பஞ்ச்குலாவில் எங்காவது ஒரு இடத்தை அரியானா அரசு ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து