முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே எழுதலாம்: மத்திய அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 21 மே 2020      இந்தியா
Image Unavailable

அந்தந்த பள்ளிகளிலேயே சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அந்த தேர்வுகள் எப்போது நடைபெறும்? என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதற்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார். தேர்வு எழுதும் மாணவர்கள் கிருமிநாசினி திரவத்தை வெளிப்படையான பாட்டிலில் கொண்டு வரலாம். முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஹால்டிக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகளை தவறாமல் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து