முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு உயரதிகாரிகளின் உயர்வகுப்பு விமான பயணத்துக்கு தடை: தமிழக அரசின் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அனுமதி மறுப்பு

வியாழக்கிழமை, 21 மே 2020      தமிழகம்
Image Unavailable

அரசு உயரதிகாரிகளின் உயர்வகுப்பு விமான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அனைத்து துறைகளிலும் புதிய பதவிகளை உருவாக்கவும் தடை விதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது தமிழக அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் 51 ஆயிரத்து 5 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரசை ஒழித்துக் கட்ட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒவ்வொரு மாநிலங்களும் மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றன. சில மாநிலங்கள் நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதுபோன்ற நடிவடிக்கை எடுக்கவில்லை. 

மக்களுக்கு விலையில்லா
ரேசன் பொருட்கள்

இதுவரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மூன்று முறை அமல்படுத்தப்பட்டு தற்போது 4-வது முறையாக நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 1000 உதவித் தொகை வழங்கியது. அதன் பிறகு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தையும் தமிழக அரசு விலையில்லாமல் வழங்கி வருகிறது. மேலும் மருத்துவ கருவிகள் வாங்கவும் தமிழக அரசு கணிசமான தொகையை செலவிட்டு வருகிறது.

பிரதமருக்கு கடிதம்

இந்நிலையில் தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்றெல்லாம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கடிதங்களை எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

இதற்கிடையில் மத்திய அரசு நேற்று முன்தினம்தான் தமிழக உள்ளாட்சி துறைக்கான நிதியை ஒதுக்கியது. மேலும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இருப்பினும் கூட தமிழக அரசு சிக்கன நடவடிக்கைகளை தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

புதிய பதவிகளை உருவாக்க தடை

பொருளாதார சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய பதவிகளை உருவாக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு சில விதிவிலக்கான விஷயங்களில் மட்டும் அரசின் வழிமுறைகளோடு புதிய பதவிகள் தோற்றுவிக்கப்படும். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் புதிய பதவிகளை உருவாக்க முழுமையான தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைவு பரிசு வழங்க கூடாது

கொரோனா வைரஸ் தொற்றால் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது. மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்.

விருந்துகளை தவிர்க்க அறிவுறுத்தல்

நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவதை 50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும். விளம்பரச் செலவகளை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. புதிய கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்குவதற்கு அனுமதி இல்லை. இருப்பினும் மிகப் பெரிய கம்ப்யூட்டர்களை மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து