முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்த செப்.30 வரை அவகாசம் : சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த செப்.30 வரை சென்னை ஐகோர்ட் அவகாசம் அளித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 30-க்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிக வரித்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும், தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து சிறப்பு அதிகாரி அக்டோபர் 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து