முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடருக்குத் திட்டம்: பி.சி.சி.ஐ. பரிசீலனை

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு குறுந்தொடரை ஆடலாம் என்று பி.சி.சி.ஐ. பரிசீலித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் இருநாட்டு வாரியங்களுக்கும் இடையே நடைபெற்று வருகிறது.

3 டி20 போட்டிகள் கொண்ட தொடராக இது இருக்கலாம் என்று தெரிகிறது.ஆனாலும் அரசு அனுமதி அளித்தால்தான் வெளிநாட்டுப் பயணம், கிரிக்கெட் சாத்தியமாகும். இருநாடுகளுக்கும் ஆன சமீபத்திய ஒருநாள் தொடர் மார்ச்சில் ரத்து செய்யப்பட்டதை ஈடுகட்ட இந்த டி20 தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு வாரியங்களுக்கும் பொது ஒளிபரப்பு நிறுவனம் இருப்பதால் தொடரை நடத்துவதில் சிக்கல் இருக்காது என்றும் பார்க்கப்படுகிறது. பி.சி.சி.ஐ. மருத்துவக் குழு உதவிப் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து ஆலோசித்து ஜூன் மாதத்தில் பயிற்சியைத் தொடங்க பரிசீலித்து வருகிறது. இந்த தென் ஆப்பிரிக்கா, இந்தியா தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து