மதுரை முத்துப்பட்டியில் உள்ள 3800 வீடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் - கபசுர குடிநீர் பொடி : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
Sellur Raju 2020 05 22

Source: provided

மதுரை : மதுரை பழங்காநத்தம் முத்துப்பட்டியில் உள்ள 3800 வீடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று வழங்கினார்.

கொரோனா தடுப்பு பணியாக முத்துப்பட்டி குடிசைப்பகுதியில் உள்ள 844 குடியிருப்புகளின் 3800 வீடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடியினை ஆணையாளர் விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-  

தமிழக முதல்வர் எடப்பாடியார் கொரோனா தடுப்பு பணியினை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். மதுரை மாநகராட்சியில் மொத்தம்  142 வரையறுக்கப்பட்ட குடிசை பகுதிகளும்,  189 வரையறுக்கப் படாத குடிசை பகுதிகளும் உள்ளன. இதில் சுமார் 93,264 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக பொதுமக்களுக்கு 50 கிராம் கபசுரகுடிநீர் பொடி, ஜிங்க் சல்பேட் 150 மி.கி. மற்றும் வைட்டமின் சி 500 மி.கி. ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மண்டலம் எண்.4 வார்டு எண். 93 - ல் உள்ள முத்துப்பட்டி குடிசைப்பகுதிகளில் சுமார் 844 குடியிருப்புகளில் 3,800 பொதுமக்களுக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்படுகிறது. 

மேலும் இப்பகுதிகளில் நோய் பரவலை தடுக்கும் வகையில் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி குடிசைப்பகுதியான மதிச்சியம் பகுதியில் தொடங்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 17 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். அதில் 4 லட்சம்  குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 1.50 லட்சம் வீடுகளுக்கு விலையில்லாமல் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 2.50 லட்சம் வீடுகளுக்கு தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மூலம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 

மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 25 - ம் தேதி வைகை அணையிலிருந்து குடிநீர் திறந்து வைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் 20 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாக கிடைக்கும் மதுரை மாநகர மக்களுக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. பொதுவாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தினால் திருவிழா நடைபெறுவது தடைசெய்யப்பட்டிருந்தது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியார் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து 125 எம்.எல்.டி. குடிநீரை குழாய் மூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் பண்ணைப்பட்டியில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஏற்கனவே வைகை அணையிலிருந்து வரும் பழைய குடிநீர் குழாயில் கொண்டு வராமல் புதிய குடிநீர் குழாய் மூலம் மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் தினந்தோறும் குடிநீர் அவரவர் வீட்டு குழாய்களிலே கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான மூன்று கட்ட டெண்டர் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது விரைவில் பணிகள் துவங்கும். மதுரை மாநகராட்சியின் ஒரு சில வார்டுகளில் உள்ள மேட்டு பகுதிகளில் குடிநீர் குழாய்களில் குடிநீர் கொண்டு வருவது சிரமமாக உள்ளதால் பள்ளமான பகுதிகளில் குடிநீர் சென்று விடுகிறது அதை சீர்;செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு மதுரை மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது ஆனால் இந்த ஆண்டு குடிநீர் தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான குடிநீர் உள்ளது. இதன் மூலம் மதுரை மாநகர மக்களுக்கு  இரண்டு நாளுக்கு ஒரு முறை தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு பொதுமக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தனித்திருந்து, விழித்திருந்து, வீட்டில் இருக்க வேண்டும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். மேலும்  பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள  வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரினை பருகி நோய் எதிர்ப்;பு சக்தியை அதிகரித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர் அரசு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் .பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில மாணவரணி இணை செயலாளர் பி.குமார், பசுமலை முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஏ.வி.எஸ்.பிரிட்டோ,உதவி ஆணையாளர் பி.எஸ்.மணியன், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிசெயற் பொறியாளர் குழந்தைவேலு, சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ்,  உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு 24.05.2020 | Coronavirus Update Tamil Nadu District Wise

Egg Malai Masala | Easy step by step recipe

Caramel Pudding with Azhagu Serial Actress Sahana Shetty | நடிகை சஹானா ஷெட்டியின் கேரமல் புட்டிங்

ஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1

Sachin Tendulkar Gives Haircut To His Son Arjun Tendulkar

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Shanaya's Science Experiment with Baking Soda and Vinegar | Funny ending

இயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Baby Shanaya's first finger painting on a canvas

கபசுர குடிநீர் செய்முறை | Kabasura Kudineer |How To Make Kabasura Kudineer| Immune Booster| Immunity

சமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

SHRUTI HASSAN singing a classic song #Lockdown

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

சளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?Remedy For Cough And Cold Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து