முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகிக்கு வெடிகுண்டு மிரட்டல் : வலைவீசி தேடும் உ.பி. போலீசார்

சனிக்கிழமை, 23 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தரபிரதேச மாநில போலீஸ் தலைமையகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்ததுடன், அவரை வெடிகுண்டு வீசி கொல்லப் போவதாக மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அங்குள்ள கோமதி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், விரைவில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து