தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கூட்டம்

சனிக்கிழமை, 23 மே 2020      தமிழகம்
MK Stalin 2020 05 23

Source: provided

சென்னை : தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி வழியாக நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் மே 24, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து