முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்றத்தில் எச்1 பி விசா சீர்திருத்த சட்ட மசோதா தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வா‌ஷிங்டன் : எச்1 பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். அதிபர் டிரம்ப், பதவிக்கு வந்த நாளில் இருந்து அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி எச்1 பி விசாவை பெறுவதற்கான நிபந்தனைகளை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது.

இந்த நிலையில் எச்1 பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவிலேயே கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு, எச்1 பி விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் கல்வி பயிலும் சிறந்த திறன் வாய்ந்த மாணவர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்யும்.

ஆனால் அமெரிக்க பணியாளர்களுக்கு பதில் அந்த இடத்தில் எச்1 பி விசா பெற்ற வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதையும், தடுக்க வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபை, செனட் சபை என 2 அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு இந்த மசோதா மீது விரைவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதா நிறைவேறி சட்டமாகும் பட்சத்தில் அது அமெரிக்காவில் தற்போது படித்து வரும் இந்திய மாணவர்களுக்கு பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து