முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர் கொரோனாவுக்கு பலி

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவரான பேராசிரியர் ஜிதேந்திர நாத் பாண்டே கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரையும் கொரோனா தாக்கி வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட போலீசார், சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு சில டாக்டர்களும் பலியான சம்பவங்களும் நடந்து உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவரான பேராசிரியர் ஜிதேந்திர நாத் பாண்டே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் துறை இயக்குனராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். கொரோனா காரணமாக இவர் உயிரிழந்ததை டெல்லியின் மூத்த மருத்துவர் டாக்டர் சங்கீதா ரெட்டி உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் துறை இயக்குனரும், பேராசிரியர் டாக்டர் பாண்டேவை கொரோனா எடுத்துக் கொண்டது என்று கூறியதை கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து