முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று விமான சேவை துவக்கம்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இன்று 25-ந் தேதி  (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த 20-ம் தேதி அறிவித்தார். அதன்படி, இன்று 25ம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை  தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 25ம் தேதி தமிழகத்தில்  விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இருப்பினும், விமான பயணிகளுக்கான புதிய  வழிகாட்டு நெறிமுறைகளை பல்வேறு மாநிலங்கள் வெளியிட்டு வருகின்றன. பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு  ஆணையமும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகமும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை வருமாறு:- 

விமானம் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் டி.என். இபாஸ் வலைத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். விமான டிக்கெட் வாங்கியவுடன் தங்கள் விவரங்களை டி.என்.இ.பாஸ் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். எந்த விமான நிலையத்துக்கு வந்து சேருவர் என்பதை டி.என்.இ.பாஸ் வலைதளத்தில் தெரிவிக்க வேண்டும்.  தாங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வரவில்லை என்பதற்கான உறுதியை தர வேண்டும்.

கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்டுத்தப்படுவார்கள். தவறான தகவல் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனை ஏதும் இல்லை என்பது குறித்தும் உறுதி மொழி அளிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து