முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ரமலான் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருக்குர்ஆன் புனித நூல் அருளப்பட்ட மேன்மைமிகு ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறோம். 

இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில், எங்களது உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து