முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரம்ஜான் கொண்டாட்டம் : வீடுகளில் தொழுகை நடத்திய இஸ்ஸாமியர்கள்

திங்கட்கிழமை, 25 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் வீடுகளிலேயே நேற்று ரம்ஜான் தொழுகையை நடத்தினர்.

இஸ்லாமிய மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். இந்த பண்டிகை ஈகைத்திருநாள் என்றும், நோன்பு பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று சிறப்புத் தொழுகை மேற்கொள்வார்கள். தொழுகைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஈத் முபாரக்’ என ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வர். உற்றார், உறவினர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பார்கள்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மசூதிகள் மூடப்பட்டு உள்ளன. எனவே நிகழாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் மாத நோன்பைக் கடைப்பிடித்து, தங்களது வீட்டிலேயே தொழுகையை மேற்கொள்ளுமாறு மத குருமார்கள் வேண்டுகோள் விடுத்தனர்.இதன்படி இஸ்லாமியர்களும் தங்களது வீட்டிலேயே ரமலான் மாத நோன்பை ஏப்ரல் 24 - ம் தேதி தொடங்கி மேற்கொண்டனர். பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்களது வீட்டிலேயே குடும்பத்தோடும், உறவினர்களுடன் இணைந்து சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர். இவற்றில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து