முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க விரும்பினால் அனுமதி பெற வேண்டும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

திங்கட்கிழமை, 25 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்களை பிற மாநிலங்களில் வேலைக்கு எடுக்கும் போது உத்தரப் பிரதேச மாநில அரசிடமிருந்து முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

புலம்பெயர்வோர் ஆணையம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்வது, பிறகு மற்ற மாநிலங்களில் உ.பி. தொழிலாளர்களின் வேலை தேவை எனும்போது இந்த ஆணையத்திடமிருந்து முன் அனுமதி பெறுவது என்று இரட்டை நோக்கமாக ஒரு திட்டத்தை உ.பி. அரசு பரிசீலித்துள்ளது. 

இது தொடர்பாக முதல்வர் யோகி கூறுகையில், சில மாநிலங்களில் உ.பி.தொழிலாளர்களுக்கான தேவை ஏற்பட்டால் உ.பி.அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். 

இதுவரை, அதாவது ஞாயிறு வரை சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் உ.பி.க்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து புலம்பெயர்வோர் கமிஷனை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக கூடுதல் முதன்மை செயலர் அவனீஷ் அவாஸ்தி தெரிவித்துள்ளார். அதே போல் தொழிலாளர்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க காப்பீடு வசதி குறித்தும் முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.

காப்பீடு, சமூகப் பாதுகாப்பு, மறு வேலைவாய்ப்பு உதவி, வேலையின்மை அலவன்ஸ் ஆகியவை உள்ளிட்ட தொழிலாளர் நலன் விவகாரங்கள் இந்த கமிஷன் மூலம் பரிசீலிக்கப்படும் என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து