முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா நிவாரணத்தில் விளம்பரம் தேடுவது அ.தி.மு.க. அல்ல : முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேட்டி

திங்கட்கிழமை, 25 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா நிவாரணத்தில் விளம்பரம் தேடுவது அ.தி.மு.க. அல்ல என்றும்,தி.மு.க. ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் பொய்யான விளம்பரம் தேடுவதாகவும் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சரும்,தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி கூறினார்.

சென்னை ஆயிரம்விளக்கு 118 வது வார்டில் முன்னாள் கவுன்சிலரும்,இலக்கிய அணி இணை செயலாளருமான டி.சிவராஜ் ஏற்பாட்டில் கொரோனா நிவாரண உதவியாக 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழ் நாடு பாட நூல் கழக வாரிய தலைவர் பா.வளர்மதி வழங்கினார்.

பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி தெளித்த பின்னர் பொதுமக்கள் இந்த நிவாரண உதவிகளை பெற்று சென்றனர். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் ஆ.பழனி, பி.ஆறுமுகம் (எ) சின்னையன் கே.எஸ்.மலர்மன்னன், இ.பச்சையப்பன், எஸ்.வெங்கடேசன், விஜய் கார்மேகம், பலராமன், முடியழகி, ஜெயராஜ், வாட்டர் ஆரி, இந்துமதி, பழனிச்சாமி, மலர்விழி, சுகுணா, விமலா, மார்ஷ்ல்,சதிஷ்குமார், மணி, முரளி ஜெய், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து