முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்து பரிசோதனை நிறுத்தம் : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரை நல்ல பலனை அளித்ததாக தகவல் வெளியானது. இதே கருத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரையை இறக்குமதி செய்தது. உலக அளவில் அந்த மாத்திரை தேவை அதிகரித்தது. இதற்கிடையே மலேரியா தடுப்பு மாத்திரை கொரோனா சிகிச்சையில் பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் சில ஆய்வுகளிலும் மலேரியா தடுப்பு மாத்திரை பலன் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர். இந்த நிலையில் லான் கேட் மருத்துவ ஆய்வுகள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரை பாதுகாப்பானது அல்ல என்றும் இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தது.

மேலும் வெண்டிலேட்டரை பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறி உள்ளது. இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்துவதை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் தேட்ராக்ஸ் கூறும் போது, பல நாடுகளில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் மருத்துவ பாதுகாப்பு கருதி மலேரியா தடுப்பு மாத்திரை பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சையில் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரிய வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து