முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ. 36,184க்கு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது. 

கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று விலை குறைந்துள்ளது.சென்னையில் நேற்று (மே 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,523 ஆக குறைந்து இருந்தது. நேற்று முன்தினம் இதன் விலை 4,544 ஆக இருந்தது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து இருந்தது.

அதேபோல, நேற்று முன்தினம் 36,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 168 ரூபாய் குறைந்து 36,184 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.52.50 ஆக உயர்ந்து இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 52,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து