முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாட்ஸ்பாட் பகுதியானது கேரள முதல்வரின் சொந்த கிராமம் : சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரள முதல்வரின் சொந்த ஊரான பினராய் கிராமம் உட்பட கேரளத்தில் புதிதாக நான்கு இடங்கள் கொரோனா தொற்று அதிகமாகப் பரவும் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட கேரள மாநிலத்தில் தொற்றுப் பரவல் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தாலும் நாளுக்கு நாள் அந்தக் கட்டுப்பாடுகள் தகர்ந்து கொண்டே போகின்றன. இதனால் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது கேரளா.

இந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில், கேரள முதல்வர் பினராய் விஜயனின் சொந்த ஊரான பினராய் கிராமமும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிக்குள் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தற்போது கேரளாவில் ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 55-ல் இருந்து 59 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து