முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்புக்கு அனுமதி: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து சின்னத்திரை சங்கத்தினர் நன்றி

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்  ஆர்.கே. செல்வமணி  ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டியது தொடர்பான தங்களது கோரிக்கையினை தமிழக முதல்வரிடம் எடுத்துச் சென்று, சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தந்ததற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 

சின்னத்திரை படப்பிடிப்பின்போது அதிகபட்சமாக நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம் என்று தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியினை தளர்த்தி அதிகபட்சமாக 50 சதவீத எண்ணிக்கையில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தருமாறு சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்  ஆர்.கே.செல்வமணி  ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இக்கோரிக்கையினை மீண்டும் முதல்வரின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் அம்மா  திரைப்பட படப்பிடிப்பு நிலையம்  கட்டுவதற்காக முதல்வர் அறிவித்த ரூ.5 கோடி நிதியில் முதல் தவணையாக ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூபாய் ஒரு கோடி நிதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனவும்,  மீதமுள்ள ரூ.50 லட்சத்தை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அம்மா திரைப்பட படப்பிடிப்பு நிலையம் கட்டுவதற்கான நிதியினை விரைந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதியளித்தார். 

 

இந்நிகழ்வின்போது, திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார், பெப்சியின் துணைத்தலைவர் மற்றும் இசையமைப்பாளர் தினா, திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் லியாகத் அலிகான் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகி வெங்கட் ஆகியோர்  உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து