முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கின் நோக்கம் இந்தியாவில் தோல்வி அடைந்து விட்டது: ராகுல்காந்தி

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் ஊரடங்கின் நோக்கம் தோல்வி அடைந்து விட்டதாகவும், ஊரடங்கு தோல்வி அடைந்ததன் விளைவை இந்தியா சந்தித்து வருவதாகவும் ராகுல் காந்தி கூறி உள்ளார். 

மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசு நடந்து கொண்ட விதம் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார். தொழிலாளர்களுக்கு இப்போதைய தேவை, பண உதவி என்பதால், நேரடியாக அவர்களுக்கு பண உதவியை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில், கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று காணொலி மூலம் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிவேகமாக கொரோனா உயரும் நாடாக இந்தியா உள்ளது. நாம் இப்போதுதான் ஊரடங்கை நீக்குகிறோம். ஊரடங்கின் நோக்கமும், தேவையும் தோல்வியடைந்து விட்டது. படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால் அது நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு உதவவில்லை. வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஊரடங்கு தோல்வி அடைந்ததன் விளைவை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த விஷயத்தில் தனது முதல் திட்டம் தோல்விடைந்து விட்டது என்பதை பிரதமர் ஏற்றுக் கொள்வார் என நினைக்கிறேன்.

எனவே, அரசு தனது புதிய திட்டத்தை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். நமக்கு இப்போது பணம் மற்றும் மூலதனம் என்ற ஊசி தான் தேவை. அதை செய்யாவிட்டால் நிலைமை அபாயகரமானதாக மாறும். கொரோனா வைரஸ் பிரச்சினையால் நாட்டில் வேலையின்மை மேலும் அதிகரித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர். அவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். யாரும் அவர்களின் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இப்போதுகூட நம்மால் நடவடிக்கை எடுக்க முடியும். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு 7500 ரூபாய் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து