முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியது

புதன்கிழமை, 27 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,387 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

நேற்று (மே.,27) காலை 9:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45,380 ல் இருந்து 1,51,767 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,167 ல் இருந்து 4,337 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,491 ல் இருந்து 64,426 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 83,004 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 6-வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து