முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் எளிமையாக நடந்த டாக்டர்-நர்ஸ் திருமணம்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : பிரிட்டன் நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் செயின்ட் தாமஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அன்னாலன் நவரத்தினம். இதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் ஜான் டிப்பிங். இவர் வட அயர்லாந்தைச் சேர்ந்தவர்.இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இரு வீட்டாரிடமும் திருமணத்துக்கு சம்மதம் பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா பிரச்சினையால் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே, இருவருடைய பெற்றோரும் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து ஜான் டிப்பிங் கூறும் போது, 

எங்களது திருமண வீடியோ, புகைப்படங்களை மெயில் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அனுப்பினோம் என்றார். ஏப்ரல் 24-ல் நடந்த திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை மருத்துவமனை நிர்வாகம் 2 நாட்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘லைக்’ போட்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து