முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக தொழிலை மேம்படுத்தவும், புதிய தொழில்களை தொடங்கவும், ரூ. 300 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம் : கடன் உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஊரகத் தொழில்களை  மேம்படுத்தவும்,  வருமானத்தை பெருக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுக்கவும் உலக வங்கியின் கடனுதவியுடன் 918 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 120 வட்டாரங்களைக் சேர்ந்த 3,994 கிராம ஊராட்சிகளில் அம்மாவின் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

தமிழ்நாடு அரசு,  இத்திட்டத்திற்காக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலக வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. இத்திட்டம் பல்வேறு சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதன் மூலம் ஊரக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் நியமனம் செய்ய 31.10.2019 அன்று தமிழக முதல்வரால் 525 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு திட்டம் குறித்த உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டன. 

28.5.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையில் இருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் புதிதாகத் தொழில்களைத் தொடங்கவும் 300 கோடி ரூபாய் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5  பயனாளிகளுக்கு   சிறப்பு நிதியுதவி வழங்கினார்.  

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட கிராமப்புற தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், பல்வேறு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்,  தனிநபர்கள்,  உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்,  உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்,  மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் மற்றும் பிற பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்த இளைஞர்கள் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பின் அதனை மேம்படுத்திடவும், தமிழ்நாடு ஊரகப் புத்தாகத் திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 1,39,574 பயனாளிகள் பயன் பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 

இத்திட்டத்தின் மூலம், 31,952 நபர்களுக்கு மொத்தம் 159 கோடியே 76 லட்சம் ரூபாய் நீண்டகால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். 1,598 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 31,960 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒரு முறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு (20 நபர்கள்)  ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 23 கோடியே 97 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குழு ஒன்றுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 240 தொழில் குழுக்களுக்கு (1200 நபர்கள்) தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படும். புலம் பெயர்ந்து மீண்டும் திரும்பி வந்த 5,010 இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 50 கோடியே 10 லட்சம் ரூபாய் நீண்டகால கடனாக வழங்கப்படும். ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு 500 நபர்கள் வீதம் 37,500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 75 உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு தலா 10 லட்சம் ரூபாய் என 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மூலதன மானியமாக வழங்கப்படும். 

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக 31,952 நபர்களை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் மொத்தம் 49 கோடியே 92 லட்சம் ரூபாய் நீண்ட காலக் கடனாக வழங்கப்படும்.  இத்திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசம் தயாரித்தல்,  கிருமி நாசினிகள் மற்றும் கைகழுவும் திரவ சோப்பு தயாரித்தல், ஆடைகள் தயாரிப்பு,  பால்வள மேம்பாடு,  ஆடு, மாடு, கோழி, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, சிறு உணவகங்களை நடத்துதல், வேளாண் பொருட்கள் விற்பனை,  சிறு மளிகைக் கடைகள் வைத்தல்,  அரவை மாவுத் தொழில், பல்வேறு உலோகப் பொருட்களை தயாரித்தல், செயற்கை ஆபரணத் தொழில்,  அழகுக்கலை, மரச்சிற்பங்கள் / மரவேலைகள்,  மின் பழுது நீக்கம்,  குழாய் பழுது நீக்கம்,  வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுநீக்கம், கணினி சார்ந்த தொழில்கள், கைபேசி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் மேம்பாட்டிற்காக இச்சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.  இதன் மூலம் ஊரக பொருளாதார வளர்ச்சியும், ஊரக தொழில்களில் எழுச்சியும், மக்கள் வருமானத்தில் முன்னேற்றமும் ஏற்படும்.  

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா,  தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட தலைமைச் செயல் அலுவலர் எஸ்.பி. கார்த்திகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து