முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மரணம்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி நேற்று காலமானார் (வயது 74).

மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் ராய்ப்பூரில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 3 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்று பிற்பகல் அவரது உடல்நிலை மிகவும் மோசடைந்து உயிரிழந்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரது மகன் அமித் ஜோகி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஜித் ஜோகி 1946-ல் பிலாஸ்பூரில் பிறந்தவர். போபாலில் உள்ள ஐ.ஐ.டி.யில் படித்த ஜோகி, ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று இ்ந்தூரில் 1981 முதல் 1985 வரை மாவட்ட  கலெக்டராக இருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் இரு முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யான அஜித் ஜோகி வெற்றி அனைவரும் அறியும்படி செயல்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்டபி்ன் 2000 முதல் 2003-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக ஜோகி இருந்தார்.

அதன்பின் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் 2016-ம் ஆண்டு பிரிந்து சென்று ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை உருவாக்கினார். சமீபத்தில் நடந்த தேர்தலில் மார்வாஹி தொகுதியில் போட்டியிட்டு வென்று ஜோகி எம்.எல்.ஏ.வாக ஆனார். சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நீண்டகாலம் நட்பு பாராட்டி வந்த போதும் அஜித் ஜோகிக்கும், ராகுல் காந்திக்கும் இணக்கமான உறவு இல்லை. இதையடுத்தே அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை தொடங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து