முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக இந்தியாவில் விமான சேவைகள் முடக்கத்தில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது, இந்த ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளதால் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து, அமெரிக்கா தென் அமெரிக்க ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான சேவை அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஜூன் மாதத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்டும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதற்குமுன் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அதாவது டெல்லி, மும்பை நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு 8  சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து ஜூன் நான்காம் தேதி ஆக்லாந்துக்கும், ஜூன் ஐந்தாம் தேதி சிகாகோ, ஸ்டாக்கோம் நகரங்களுக்கும் விமானங்களை இயக்குகிறது. ஜூன் ஆறாம் தேதி நியூயார்க், பிராங்க்பர்ட், சியோல் நகரங்களுக்கும் விமானங்களை இயக்க உள்ளது. மும்பையில் இருந்து ஜூன் ஆறாம் தேதி லண்டனுக்கும், நியூ ஆர்க்குக்கும் விமானங்களை இயக்குகிறது. இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு சனிக்கிழமை பகல் 11 மணிக்குத் தொடங்குகிறது. ஏர் இந்தியா இணையத்தளத்திலும் அலுவலகங்களிலும் பயணச்சீட்டுகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து