முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணி : அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டார்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கும்பகோணம் : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகள்வேளாண்துறை அமைச்சர் இரா துரைக்கண்ணுபார்வையிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் பேட்டியின் விபரம் பின்வருமாறு 

ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது. எனவே கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தண்ணீர் வருவதற்கு முன் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளும் முழுமையாக நிறைவு பெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

முன்னதாக, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மங்குடி ஊராட்சியில் உள்ள சாவடிக்குளம் மற்றும் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஆண்டானூர் குளம் ஆகியவற்றில் தலா ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர் வாரும் பணிகளை அமைச்சர் இரா துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்

பிறகு கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அரசலாற்றின் குறுக்கே ரூபாய் 2 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில், கிருஷ்ணாபுரம் மற்றும் செம்பியவரம்பலை இணைக்கும் பாலக்கட்டுமான பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் AVK. அசோக்குமார்மற்றும் அரசு அதிகாரிகள்ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து