முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும், மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டம்

சனிக்கிழமை, 30 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும் அதற்காக மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மத்திய அரசுடன் முழு மனதுடன் ஒத்துழைப்போம். ஆனால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான அதிகார சமநிலையற்ற தன்மை பல சவால்களை உண்டாக்குகிறது. எனவே அரசமைப்பின் மூலம் மத்திய அரசுடனான அதிகார சமநிலையில் உள்ள சவால்களை தீர்க்க முயல்கிறோம். 

அதே நேரம் மத்திய அரசுடன் ஒத்துழைத்து போவதற்காக மாநில நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். 2017-ல் ஓகி புயல், 2018-19ம் ஆண்டுகளில் பெருவெள்ளம், 2 ஆண்டுகளில் இரு முறை நிபா வைரஸால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகள் என ஒவ்வொரு பிரச்சனையிலும் கேரளாவே ஓன்று சேர்ந்து போராடி மீண்டுள்ளது.

மத்திய அரசுடனான உறவில் சமமான அதிகாரம் இல்லாதது சவால்களை உருவாக்குகிறது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே கேரளாவில் பொது முடக்கம் தொடங்கப்பட்டு விட்டது. மேலும் முரண்பாடுகளை ஒதுக்கி விட்டு, மத்திய அரசுடன் ஒத்துழைத்து மாநிலத்திற்கான பலன்களை பெற முயற்சித்து வருகிறோம். அதற்காக மாநில நலனில் சமரசம் கிடையாது. இவ்வறு கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து