முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

167 புலம்பெயர் தொழிலாளர்கள் ஒடிசா செல்ல தனி விமானம் : பாலிவுட் நடிகர் சோனு சூட் ஏற்பாடு

சனிக்கிழமை, 30 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கேரளாவில் சிக்கியிருந்த 167 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான ஒடிசா செல்வதற்கு, தனி விமானத்தை ஏற்பாடு செய்து பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவியுள்ளார். 147 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 167 பேர் கொச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் புவனேஷ்வர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தபாங், அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சோனு. ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததில் இருந்து மும்பையிலிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான பேருந்து வசதிகளை சோனு சூட் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் கேரளாவில் சிக்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 167 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்து சோனு சூட் உதவியுள்ளார். சோனு சூட் விடுத்த அறிக்கையில்,

ஊரடங்கில் தவித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த போது, எவ்வாறு அவர்களை குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பது, வீட்டில் கொண்டு சேர்ப்பது என்பது மட்டுமே என் மனதில் தோன்றியது. புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல விமானம் வழங்கிய ஏர் ஏசியா நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். கொரோனா நேரத்தில் தொழிலாளர்களைப் பாதுகாப்பாகச் சேர்த்த ஏர் ஏசியா நிறுவனம் கோவிட் ஹீரோ எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து