முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு : இந்தியாவை அழைக்க டிரம்ப் விருப்பம்

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : இம்மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அதிபர் டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அமெரிக்காவில் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்துவதைவிட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி, வாஷிங்டனில் இம்மாத(ஜூன்) இறுதியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் வரும் 10-ம் தேதி நடைபெற இருந்த ஜி-7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க அதிபர்   டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். டிரம்ப் பல நாடுகளுக்கும் இந்த காணொலி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கேப் கார்னிவலுக்கு சென்று விட்டு  வாஷிங்டன் திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க தாம் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

தற்போதுள்ள ஜி-7 அமைப்பு மிகவும் காலாவதியான குழுவாக உள்ளது என்றும் அப்போது டிரம்ப் குறிப்பிட்டார். அண்மையில் சீனாவுடன் வலுத்து வரும் மோதல் மற்றும் உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு போன்றவற்றால் அமெரிக்கா அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் அமெரிக்காவுக்கு ஆதரவான நட்பு நாடுகளை ஜி-7 குழுவில் இணைக்க அதிபர் டிரம்ப் விரும்புவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து