முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதாரணமாக ஏற்படும் இருமலும், தும்மலும் கொரோனா அல்ல : எய்ம்ஸ் மருத்துவர்கள் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சாதாரணமாக ஏற்படும் அனைத்து இருமல், தும்மலும் கொரோனா அல்ல என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டு உள்ள தகவலில் வறட்டு இருமலும், தும்மலும் இணைந்து வந்தால் அது காற்றின் மாசுபாடு காரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இருமலுடன் சளி, தும்மல் மற்றும் மூக்கில்  ஒழுகல் போன்ற பிரச்சினைகள் காணப்பட்டால் அவை சாதாரண ஜலதோஷம் என்று குறிப்பிட்டுள்ள எய்ம்ஸ் நிர்வாகம், மேற்கண்ட அறிகுறிகளுடன் உடல் வலி, தளர்ச்சியாக உணர்தல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்தால் அவை புளு காய்ச்சலின் அறிகுறியாகும் எனக் கூறியுள்ளது.

இதேபோன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே டாக்டர்களை அணுகவேண்டும் என்றும், மேற்கண்ட அறிகுறிகளே கொரோனாவாக மாற வாய்ப்பிருப்பதாகவும் எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து