முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 30-ம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை வர்த்தகரீதியான சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டி.ஜி.சி.ஏ.)அறிவித்துள்ளது

ஜுன் 8-ம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்துவதற்கான முதல்கட்டம் தொடங்குவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்து, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியி்ட்டது. இதன்படி வரும் 8-ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், விருந்தினர் சேவைத்துறை ஆகியவை இயங்க அனுமதித்துள்ளது. அதைத் தொடர்ந்து விமானப்போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஜூன் 30-ம் தேதி வரை இந்தியாவிலிருந்து எந்தவிதமான சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்தும் இயங்காது. அவ்வாறு சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் விமான சேவையை தொடங்கினால் அதற்குரிய வகையில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் சூழல்களுக்கு ஏற்ப, கொரோனா வைரஸ் பரவலை மதிப்பீடு செய்து அடுத்த கட்ட அறிவிப்பு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் லாக்டவுனால் கடந்த 2 மாதங்களாக இயக்காமல் இருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த 25-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து