முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் அலுவலக கூடுதல் செயலராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக தமிழகத்தை சேர்ந்தவரும், சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவருமான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமன குழு அளித்துள்ளது. 

1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ஜ் அதிகாரியான அவர் தற்போது, தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக உள்ளார். சென்னை ஐ.ஐ.டி.,யில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்த அவர், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்., மில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார்.

டெவலெப்மென்ட் ஸ்டடிஸ் தொடர்பாக நெதர்லாந்தின் ரோட்டார்டேமில் உள்ள எஸ்ராமஸ் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார். அமைச்சரவை நியமன குழுவானது, பீகார் கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, இணை செயலாளராகவும், இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீரா மொகந்தியை பிரதமர் அலுவலகத்தின் இயக்குநராகவும் நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2001-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ஸ்ரீதர், விவசாயத்துறையில் பட்டமேற்படிப்பு பெற்றுள்ளார்.

மேலும் மரபியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். தற்போது, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடமியில் மூத்த இணை இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மீரா மொகந்தி, அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து