முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணின் இறுதி சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மராட்டியத்தில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற,18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில்,  தானே அடுத்த உல்ஹாஸ்நகர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்த பின் அந்த பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் தடையை மீறி 70 பேர் வரை பங்கேற்றதாக கூறப்படுகிறது. மே 25-ம் தேதி பெண்ணின் உடலை வெளியே எடுக்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் இறுதி சடங்கு செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலை பையில் இருந்து வெளியே எடுத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து இறுதிசடங்கில் பங்கேற்ற நெருங்கிய உறவினர்கள் உட்பட 70 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று நோய் சட்டத்தினை மீறியதற்காக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து