முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பஸ்கள் ஓடத்தொடங்கின : பேடிஎம் மூலம் பஸ் கட்டணம் வசூல்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரசு பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் தேவைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பஸ்கள் இயக்கப்படும். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை  (இன்று)முதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் ஓடத்தொடங்கும். அரசு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 

அரசு பேருந்து ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை. 2 அரசு பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்த வரை மின்னணு முறையை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு அரசு பஸ்கள் ஓடத் தொடங்கின. ஆனாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பஸ்கள் ஓடவில்லை. குமரி மாவட்டத்தில் இன்று முதல் பஸ்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் நகர பஸ்களும், வெளியூர் பஸ்களும் ஓடத் தொடங்கிவிட்டன. சில இடங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. எல்லோரும் முகக்கவசம் அணிந்தே பயணம் செய்தார்கள். முன்னதாக அவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து