முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல்வரி தேவையில்லை: எதிர்கட்சிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பதில்

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநிலத்தின் வரி வருவாய் நன்றாக இருப்பதால் கூடுதல் வரி தேவையில்லை என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உ.பி., முதல்வர் யோகி சீனாவில் இருந்து வெளியேற விரும்பும் நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு இடமாக உ.பி., மாநிலம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார். அரசு எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக முன்னேறி வருகிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாத வருவாய் நன்றாக இருக்கிறது. 

பொருளாதார மந்தநிலையை தடுக்க கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் ஆலோசனையை நிராகரிப்பதாக கூறிய முதல்வர், அவர்கள் செய்த பணிகள் மக்களால் விமர்சிக்கப்படுவதாக கூறினார். மேலும் டுவிட்டரில் கருத்து தெரிவிப்பவர்கள், ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்ய வில்லை. வெளிமாநிலங்களில் பணி புரிந்து வந்த தொழலாளர்கள் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்திற்கு திரும்பி வந்துள்ளனர் என கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து