முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் தொடரும் போராட்டம்: வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்த போவதாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 15 மாகாணங்களிலும், வாஷிங்டனிலும் 5 ஆயிரம் தேசிய போலீஸ் படையினரும், உள்நாட்டு அவசர நிலைகளுக்கான ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பாக மீண்டும் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் கலவர தடுப்பு போலீசார் மீது கற்களை எறிந்ததால் பரப்பபு நிலவியது. ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் பிளாஷ் பேங்க்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீசாரால் போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர். முக்கிய நகரங்கள் பல கலவரத்தால் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.1960 காலகட்டத்திற்கு பின்னர் இதுபோன்ற ஒரு நிலையை அமெரிக்காவில் கண்டதில்லை என சமூக, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார். ராணுவத்தை பயன்படுத்தி பரவலான வன்முறைகளைத் கட்டுப்படுத்தப் போவதாக டிரம்ப் கூறினார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது:

ஜார்ஜ் பிளாய்ட் கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும். அதிபராக எனது முதல் மற்றும் மிக உயர்ந்த கடமை நமது பெரிய நாட்டையும் அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதாகும். நமது தேசத்தின் சட்டங்களை நிலைநிறுத்துவதாக நான் சத்தியம் செய்து உள்ளேன்.அதைத்தான் நான் செய்வேன். 

ஒரு நகரம் அல்லது மாநில நிர்வாகம் தங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மறுத்தால், நான் அமெரிக்க ராணுவத்தை கொண்டு வருவேன். பிரச்சினையை விரைவாக தீர்ப்பேன் என கூறினார். போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியதால் பென்டகன் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து