முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபிக்கடலில் நிசர்கா புயல்: நாளை குஜராத்தில் கரையை கடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அரபிக்கடலில் உருவாகி உள்ள நிசர்கா புயல் குஜராத் மாநிலம் நவுசாரி அருகே நாளை ஜூன் 4-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியற்தான அனைத்துக் காரணிகளும் சரியாகப் பொருந்தியதால் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. வங்கக் கடலில் சமீபத்தில் உருவான ஆம்பன் புயல், மேற்கு வங்கத்தை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரபிக்கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் படிப்படியாக நகர்ந்து நேற்று 3-ம் தேதி காலையில் மகாராஷ்டிரா, குஜராத் கடற்கரைப் பகுதிகளை சென்றடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

முன்னதாக, தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இது வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

புயல் சின்னம் காரணமாக ஜூன் 1 , 2 ஆகிய தேதிகளில் கொங்கண் பகுதி, கோவா ஆகிய இடங்களில் கனமழை பெய்யும், வடக்கு கொங்கண் மண்டலம், மகாராஷ்டிராவின் வடக்கு மத்திய பகுதி ஆகிய இடங்களில் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளிலும், தெற்கு குஜராத், டாமன், டையு, தாத்ரா நாகர் ஹவேலி உள்ளிட்ட இடங்களில் ஜூன் 3-ம் தேதியும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது. 

அதன்படி நிசர்கா புயல் சின்னம் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 710 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து குஜராத் மாநிலம் நவுசாரி அருகே நாளை ஜூன் 4-ம் தேதி கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து