முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் நாளை முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது : பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடு தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களில் குறைந்தளவு பக்தர்களை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திருப்பதியில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில் ஜேஷ்ட மாதத்தையொட்டி சீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி, விஸ்வ சேனாதிபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. மேலும் சீனிவாசமூர்த்திக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. ஏழுமலையான் கோவிலில் உற்சவ மூர்த்திக்கு தினந்தோறும் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

இந்த அபிஷேகங்களால் சாமியின் சிலை சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே உற்சவ மூர்த்தியின் சிலை சேதமடையாமல் இருக்க கவசம் அகற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும். அதன்படி நாளை 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அப்போது உற்சவ மூர்த்திக்கு பொருத்தப்பட்ட தங்க கவசம் அகற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தி மீண்டும் பொருத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து